இறைவன் எழுதிக் காட்டும் மொழி எது தெரியுமா?

தமிழ் தான் சிவனுக்குப் பிடித்த மொழியாம்.  இதை நான் கூறவில்லை.  திருஞான சம்பந்தர், தமது தேவாரப் பாடலில் இவ்வாறு கூறுகிறார். தான் ஏன் தமிழில் பதிகங்கள் பாடினேன் என்பதை,  திருஞானசம்பந்தர்,  இந்தப் பாடலில் விளக்குகிறார். தான் பாடும் பாடல்கள் எதுவும் தமதில்லை என்றும், எல்லாம் இறைவனுடையது என்கிறார். இறைவன் எனக்குள்ளே அமர்ந்து எழுதுவதை தான், நான் இந்த உலகுக்கு வழிமொழிகிறேன் என்கிறார் சம்பந்தர்.